மட்டன் ஷோர்பா சூப்

🐐மட்டன் ஷோர்பா சூப்  இந்த கிளைமேட்டுக்கு ஏத்த சூப் 

தேவையான பொருட்கள்

🌺ஆட்டுக்கறி 250 கிராம் 
🌺ஒரு பெரிய வெங்காயம்
🌺கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
🌺 பத்து சின்ன வெங்காயம் 
🌺ஒரு  பட்டை
🌺இரண்டு இலவங்கம்
🌺ஒரு ஏலக்காய் 
🌺ஆறு பல் பூண்டு
🌺 ஒரு இன்ச் இஞ்சி
🌺ஒரு ஸ்பூன் மிளகு
🌺 அரை ஸ்பூன் சீரகம்
🌺 கொத்தமல்லி இலை
🌺அரை எலுமிச்சம் பழம்
🌺தேவையான அளவு உப்பு
🌺ஆயில்

மிக்ஸி ஜாரில் பத்து சின்ன வெங்காயம் ஆறு பல் பூண்டு ஒரு இன்ச் இஞ்சி ஒரு ஸ்பூன் மிளகு அரை ஸ்பூன் சீரகம் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

செய்முறை

🌺குக்கரில் எண்ணெய் சேர்த்து பட்டை லவங்கம் ஏலக்காய் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

🌺அரைத்து வைத்திருந்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்

🌺மட்டன் சேர்த்து வதக்கவும் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு இரண்டு கப் தண்ணீர்  எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கொதி வந்தவுடன் 

🌺ஐந்தில் ஆறு விசில் வர வரைக்கும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் கடைசியில் கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்

Comments

Popular posts from this blog

கிராமத்து மட்டன் குழம்பு

நெத்திலி கருவாடு வறுவல்

ஆம்பூர் பிரியாணி