கிராமத்து மட்டன் குழம்பு

கிராமத்து மட்டன் குழம்பு 
தேவையான பொருட்கள்
மட்டன் - 1/2 kg
சின்னவெங்காயம் -  25
தக்காளி - 1 
தேங்காய் துருவல் -  கால் மூடி
இஞ்சி, பூண்டு பேஸ்ட்  - 3  ஸ்பூன்
மஞ்சள் தூள்  - அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் -  6 ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்

வர கொத்தமல்லி -  6  ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8 
மிளகு  - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம்  - 1  ஸ்பூன் 
பச்சரிசி  - 1  ஸ்பூன்
பட்டை - 2  துண்டு
கிராம்பு - 4 
கல்பாசி - 1  

மட்டனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

சின்னவெங்காயம்,  தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

கடாய் அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் இரண்டையும் வாசனை வரும்  வரை வறுத்து விட்டு   அதனுடன் மிளகு, சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, கல்பாசி, பச்சரிசி அனைத்தையும் அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் வறுத்து விட்டு   அதனுடன்   10   சின்ன வெங்காயமும் சேர்த்து நன்கு வதக்கிக் ஆற வைத்த  கொள்ளவும்.

வதக்கி ஆற வைத்த பொருட்களுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

தேங்காய் துருவலையும்  தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சோம்பு போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் ஓரளவுக்கு வதங்கியவுடன் மஞ்சள் தூள்,  இஞ்சி , பூண்டு பேஸ்ட் சேர்த்து அதையும்  பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.

இதனுடன் தக்காளியும் சேர்த்து சிறிது வதக்கி விட்டு  கழுவி  வைத்துள்ள மட்டன் சேர்த்து  இரண்டு நிமிடம் எண்ணெயில் வதக்க வேண்டும்.

இதனுடன்  அரைத்த மசாலா விழுது  நான்கு டம்ளர் தண்ணீர் ,தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

சிறிது கொதித்தவுடன் அரைத்த தேங்காய் விழுதும் சேர்த்து நன்கு கலந்து விட்டு குக்கரை மூடி  எட்டு விசில் விட்டு இறக்கவும்.

10 நிமிடம் கழித்து திறந்து மல்லி இலை தூவினால் மிகவும் சுவையான கிராமத்து மட்டன் குழம்பு ரெடி.

Comments

Popular posts from this blog

mutton biryani at home

மட்டன் ஷோர்பா சூப்