ஆம்பூர் பிரியாணி
தேவையான பொருட்கள் :
சீரக சம்பா அரிசி
மட்டன்
காய்ந்த மிளகாய்
இஞ்சி
பூண்டு
சோம்பு
பட்டை
பிரியாணி இலை
இலவங்கம்
ஏலக்காய்
கல்பாசி
தயிர்
எலுமிச்சை
எண்ணெய்
நெய்
பெரிய வெங்காயம்
புதினா
கொத்தமல்லி இலை
உப்பு
செய்முறை :
முதலில், 25 கிராம் இஞ்சி, 25 கிராம் பூண்டு, ஆறு காய்ந்த மிளகாய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும் ,
குக்கரில், 25 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, இரண்டு பிரியாணி இலை, இரண்டு இலவங்கம், கல்பாசி, ஒரு பெரிய வெங்காயம், ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும் ,
இதனுடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின், இரண்டு தக்காளி சேர்த்து வதக்கவும் ,
ஒரு கப் மட்டன் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/4 கப் தயிர் சேர்த்து கலந்து விடவும் ,
இரண்டு கப் சீரக சம்பா அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து சேர்க்கவும், இதனுடன் நான்கு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும் ,
இறுதியாக, 25 மில்லி நெய் சேர்த்து கலந்து விடவும்
Comments
Post a Comment