വഞ്ചിറ മീൻ വറവൽ
தேவையானவை
வஞ்சிர மீன் – 4 துண்டு
எலுமிச்சம் பழச்சாறு – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
மிளகாய்த் தூள் – 25 கிராம்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
தனியாத் தூள் – 10 கிராம்
மிளகுத் தூள் – 5 கிராம்
சீரகத் தூள் – 5 கிராம்
அரிசி மாவு – 10 கிராம்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
* மேலே குறிப்பிடப்பட்டுள்ள மசாலாவைச் சேர்த்து மீனை ஊற வைக்கவும். உப்பை சரிபார்க்கவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். எண்ணையில் பொரித்தெடுத்த கறிவேப்பிலையை, மீன் துண்டுகளின் மீது தூவி விடவும்.
* எலுமிச்சை துண்டுகளை வைத்து பரிமாறலாம்.
* இது சாதம் சாம்பாருடன் சாப்பிடவும், வெறுமனே சாப்பிடவும் சுவையானதொரு வறுவலாகும்.
குறிப்பு
Comments
Post a Comment