വഞ്ചിറ മീൻ വറവൽ
வஞ்சிர மீன் வறுவல் தேவையானவை வஞ்சிர மீன் – 4 துண்டு எலுமிச்சம் பழச்சாறு – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது மிளகாய்த் தூள் – 25 கிராம் மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் தனியாத் தூள் – 10 கிராம் மிளகுத் தூள் – 5 கிராம் சீரகத் தூள் – 5 கிராம் அரிசி மாவு – 10 கிராம் உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை * மேலே குறிப்பிடப்பட்டுள்ள மசாலாவைச் சேர்த்து மீனை ஊற வைக்கவும். உப்பை சரிபார்க்கவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் வைத்திருக்கவும். * கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். எண்ணையில் பொரித்தெடுத்த கறிவேப்பிலையை, மீன் துண்டுகளின் மீது தூவி விடவும். * எலுமிச்சை துண்டுகளை வைத்து பரிமாறலாம். * இது சாதம் சாம்பாருடன் சாப்பிடவும், வெறுமனே சாப்பிடவும் சுவையானதொரு வறுவலாகும். குறிப்பு * மீன் கலவையை ஊற வைக்க சிறிது இஞ்சி, பூண்டு விழுதும் தேவையானால் சேர்க்கலாம்.