Posts

நெத்திலி கருவாடு வறுவல்

Image
நெத்திலிக் கருவாடு வறுவல் தேவையான பொருட்கள்: பொருள் - அளவு நெத்திலிக் கருவாடு100 கிராம் சின்ன வெங்காயம்20 தக்காளி1 பூண்டு பல்8 மஞ்சள் தூள்அரை டீஸ்பூன் மிளகாய் தூள்அரை டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை1 கொத்து உப்பு தேவைக்கேற்ப நல்லெண்ணெய்தேவைக்கேற்ப செய்முறை :   நெத்திலிக் கருவாடை முதலில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.   வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.   ஒரு கடாயில் எண்ணெய் விட்டு முதலில் கறிவேப்பிலை போட்டு தாளித்து, பிறகு வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.   அடுத்து பூண்டு சேர்த்து வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கி கருவாடு சேர்த்து வதக்க வேண்டும்.   பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் விட்டு மூடி வேக வைக்க வேண்டும்.   ஒன்றிரண்டு முறை திறந்து கிளறி விட்டு மூடி வேக வைக்க வேண்டும். தண்ணீர் சுண்டி கருவாடு வெந்ததும் இறக்க வேண்டும். இந்த முறையிலேயே மற்ற வகைக் கருவாடுகளையும் செய்யலாம். இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்தோடு சேர்த்து சாப்பிடலாம் 

சென்னை ஸ்பெஷல் வடகறி

Image
சுவையான வடகறி  தேவையானவை: கடலைப்பருப்பு – 150 கிராம், பெரிய வெங்காயம் – 2 , பெரிய தக்காளி – ஒன்று, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5, லவங்கம், பட்டை,  ஏலக்காய் – தலா 2, பிரிஞ்சி இலை – ஒன்று, சோம்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு , மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – விருப்பத்திற்கேற்ப, பொட்டுக்கடலை மாவு – 3 டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, தேவையானவை: கடலைப்பருப்பு – 150 கிராம், பெரிய வெங்காயம் – 2 , பெரிய தக்காளி – ஒன்று, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5, லவங்கம், பட்டை,  ஏலக்காய் – தலா 2, பிரிஞ்சி இலை – ஒன்று, சோம்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – விருப்பத்திற்கேற்ப, பொட்டுக்கடலை மாவு – 3 டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை: தக்காளியை நறுக்கி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். கடலைப்...

கனவா மீன் 🐟🐟🐟 வருவல்

Image
கனவா மீன் வருவல்  [ Kanava Fish Fry Recipe Kanava (squid) fish fry is a popular seafood dish in South India ] தேவையான பொருட்கள்   கனவா 500 கிராம் வெங்காயம் 20 பூண்டு எட்டு பல் இஞ்சி அரை விரல் அளவு மல்லி இரண்டு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் சோம்பு ஒரு ஸ்பூன் வர மிளகாய் மூன்று பட்டை இரண்டு கிராம்பு இரண்டு அண்ணாச்சி பூ ஒன்று மஞ்சள் தூள் கால் ஸ்பூன் தண்ணீர் தேவையான அளவு உப்பு தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு கொத்தமல்லி சிறிது சமையல் குறிப்புகள் ஒரு கடாயில் மல்லி, சீரகம் சோம்பு வரமிளகாய் பட்டை கிராம்பு அண்ணாச்சி பூ இதை வறுக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் இதை போட்டு அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து சின்ன வெங்காயம் சேர்க்கவும். நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மசாலாவை சேர்த்து மஞ்சள் தூள் சிறு சேர்த்து உப்பு போடவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். கனவாயை சேர்க்கவும். நன்கு வேகும் வரை வேக விடவும். கொத்தமல்லி சேர்த்து இறக்கவும் 

ஆம்பூர் பிரியாணி

Image
சுவையான ஆம்பூர் பிரியாணி  தேவையான பொருட்கள் :  சீரக சம்பா அரிசி மட்டன் தக்காளி காய்ந்த மிளகாய் இஞ்சி பூண்டு சோம்பு பட்டை பிரியாணி இலை இலவங்கம் ஏலக்காய் கல்பாசி தயிர் எலுமிச்சை எண்ணெய் நெய் பெரிய வெங்காயம் புதினா கொத்தமல்லி இலை உப்பு செய்முறை :  முதலில், 25 கிராம் இஞ்சி, 25 கிராம் பூண்டு, ஆறு காய்ந்த மிளகாய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும் , குக்கரில், 25 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, இரண்டு பிரியாணி இலை, இரண்டு இலவங்கம், கல்பாசி, ஒரு பெரிய வெங்காயம், ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும் , இதனுடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின், இரண்டு தக்காளி சேர்த்து வதக்கவும் , ஒரு கப் மட்டன் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/4 கப் தயிர் சேர்த்து கலந்து விடவும் , இரண்டு கப் சீரக சம்பா அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து சேர்க்கவும், இதனுடன் நான்கு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு, ஒரு கைப்...

மட்டன் ஷோர்பா சூப்

Image
🐐மட்டன் ஷோர்பா சூப்  இந்த கிளைமேட்டுக்கு ஏத்த சூப்  தேவையான பொருட்கள் 🌺ஆட்டுக்கறி 250 கிராம்  🌺ஒரு பெரிய வெங்காயம் 🌺கால் ஸ்பூன் மஞ்சள் தூள் 🌺 பத்து சின்ன வெங்காயம்  🌺ஒரு  பட்டை 🌺இரண்டு இலவங்கம் 🌺ஒரு ஏலக்காய்  🌺ஆறு பல் பூண்டு 🌺 ஒரு இன்ச் இஞ்சி 🌺ஒரு ஸ்பூன் மிளகு 🌺 அரை ஸ்பூன் சீரகம் 🌺 கொத்தமல்லி இலை 🌺அரை எலுமிச்சம் பழம் 🌺தேவையான அளவு உப்பு 🌺ஆயில் மிக்ஸி ஜாரில் பத்து சின்ன வெங்காயம் ஆறு பல் பூண்டு ஒரு இன்ச் இஞ்சி ஒரு ஸ்பூன் மிளகு அரை ஸ்பூன் சீரகம் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும் செய்முறை 🌺குக்கரில் எண்ணெய் சேர்த்து பட்டை லவங்கம் ஏலக்காய் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் 🌺அரைத்து வைத்திருந்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும் 🌺மட்டன் சேர்த்து வதக்கவும் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு இரண்டு கப் தண்ணீர்  எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கொதி வந்தவுடன்  🌺ஐந்தில் ஆறு விசில் வர வரைக்கும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் கடைசியில் கொத்தமல்லி இலை சே...

கிராமத்து மட்டன் குழம்பு

Image
கிராமத்து மட்டன் குழம்பு  தேவையான பொருட்கள் மட்டன் - 1/2 kg சின்னவெங்காயம் -  25 தக்காளி - 1  தேங்காய் துருவல் -  கால் மூடி இஞ்சி, பூண்டு பேஸ்ட்  - 3  ஸ்பூன் மஞ்சள் தூள்  - அரை ஸ்பூன் நல்லெண்ணெய் -  6 ஸ்பூன் உப்பு  - தேவையான அளவு வறுத்து அரைக்க தேவையான பொருட்கள் வர கொத்தமல்லி -  6  ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 8  மிளகு  - 1 ஸ்பூன் சோம்பு - 1 ஸ்பூன் சீரகம்  - 1  ஸ்பூன்  பச்சரிசி  - 1  ஸ்பூன் பட்டை - 2  துண்டு கிராம்பு - 4  கல்பாசி - 1   மட்டனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். சின்னவெங்காயம்,  தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாய் அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் இரண்டையும் வாசனை வரும்  வரை வறுத்து விட்டு   அதனுடன் மிளகு, சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, கல்பாசி, பச்சரிசி அனைத்தையும் அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் வறுத்து விட்டு   அதனுடன் ...

நண்டு 🦀🦀🦀🦀 சூப் (மதுரை ஸ்டைல்)

Image
நண்டு சூப்  சளி ( ஜலதோஷம் ) ஏற்பட்டால்  இதே போல் ஒரு முறை நண்டு சூப் வைத்து சாப்பிடுங்கள் ஒரே நாளில் காணாம போய்டும் சளி  ஒரு மிக்ஸிஜரில் ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து நன்கு பொடி செய்து எடுத்துக்கொள்ளுங்கள்  அதே ஜாரில் 8 பள்ளு பூண்டு ,3  இஞ்சி துண்டுகள் சேர்த்து நைசா அரைத்து கொள்ளுங்கள்  அதே ஜாரில் 10 போல சின்னவெங்காயம் சேர்த்து ஒனும்பாதியுமாய் அரைத்து ஒரு  குக்கரில் எண்ணெய் ஊற்றி அரைத்த மசாலைவை சேர்த்து வதக்கிவிடவும்  கூடவே மஞ்சள்தூள் , மல்லித்தூள் சேர்த்து அரைகிலோ அளவில் நண்டு சேர்த்தி கிண்டி விடவும்  தேவையான அளவு உப்பு , 2 டம்பளர் தண்ணீர் சேர்த்து கடைசில் கொத்தமல்லித்தழை , கருவேப்பியலை பிச்சு போட்டு  2 விசில் வைத்து இறக்கி சாப்பிட்டு பாருங்கள